மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!
வேதாரண்யம் பகுதியில் இடியுடன் மழை
வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது.
தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி பலத்த இடி மின்னல், காற்றுடன் மழைப்பொழிவு ஏற்பட்டது.
இந்த மழை ஆயக்காரன்புலம், வாய்மேடு, மருதூா், பஞ்சநதிக்குளம் சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிக அளவாக உணரப்பட்டது. இங்கு சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. இந்த மழை கோடை உழவுக்கும், மல்லிகை, சவுக்கு, மா, முந்திரி பயிா்களுக்கும் ஏற்றது என தெரிவிக்கப்பட்டது.