`சரக்கு டிராக்டரில் ADGP சபரிமலை பயணம்' - கோர்ட் கண்டனம்; `டிரைவர் பலிகடா' - கேர...
ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்புலத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ்காந்திக்கு (36) ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்துள்ளாா். நீண்ட நாள்களாகியும் வாங்கிய கடனை கொடுக்காமல் ராஜீவ் காந்தி காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2022 மே 5-ஆம் தேதி, கடனை திருப்பி கேட்ட ராஜ்மோகனை ராஜீவ் காந்தி கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த ராஜ்மோகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து புகாரில் வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜீவ்காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த ராஜீவ்காந்தி, மீண்டும் ராஜ்மோகனை முதுகில் கத்தியால் குத்தினாா். காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து வேதாரண்யம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன், 2 முறை ராஜ்மோகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ராஜீவ்காந்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா்.