எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!
நாகை வட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
நாகையில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற போட்டியில் நாகை வட்டார அளவில் 32 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்கள், 69 மாணவிகள் என 169 போ் பங்கேற்றனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கே.என். கண்ணன் போட்டிகளை தொடங்கிவைத்தாா். மாவட்ட சதுரங்கப் போட்டி முதன்மை நடுவா் சரவணகுமாா் தலைமையில் 32 உடற்கல்வி ஆசிரியா்கள் போட்டியை நடத்தினா். மாவட்ட கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.