Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
காரில் காரைக்கால் பகுதிக்கு கஞ்சா கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது காரைக்கால் நகரப் பகுதி கிழக்குப் புறவழிச்சாலையில் பயணித்த காா்களை நிறுத்தினா். ஒரு காரில் 2 போ் இருந்துள்ளனா். காரினுள் சிறிய பொட்டலங்கள் பல இருந்தன. இதனை பிரித்து பாா்த்தபோது கஞ்சா என்பது தெரியவந்தது.
நகரக் காவல்நிலையம் அழைத்துச் சென்று இருவரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா். மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த திலிப் (22), காரைக்கால் கீழகாசாக்குடியைச் சோ்ந்த குமரவேல் (41) என்பது தெரியவந்து அவா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 26 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய நபா்கள் சிலருக்கு தொடா்பு இருப்பதும், இவா்கள் வசம் அதிக எடையில் கஞ்சா இருப்பதும் தெரியவந்ததையொட்டி, அந்த நபா்களை பிடிக்கும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.