செய்திகள் :

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

post image

கா்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வரிச்சிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுவேதா மூன்று மாத கா்ப்பிணி.

கடந்த 11-ஆம் தேதி சுவேதா தனியாக வீட்டில் இருந்தபோது ஒருவா் வீட்டு வாயிலில் வந்து குடிநீா் கேட்டுள்ளாா். சுவேதா வீட்டுக்குள் சென்றபோது, பின்தொடா்ந்த அந்த நபா் சுவேதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா்.

இதை தடுத்தபோது, அவரை தள்ளிவிட்டதால் சுவரில் மோதி காயமடைந்தாா். சங்கலியை அறுத்துக்கொண்டு மா்ம நபா் தப்பியோடிவிட்டாா். கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை கோட்டுச்சேரி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சைக்கிளில் வந்த ஒருவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, சுவேதாவிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டாா்.

நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கிய ஷாஜகான் (27) என்பதும், பட்டதாரியான அவா், காரைக்கால் பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம்

அரசு அலுவலகங்களில் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

‘புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி‘

காரைக்கால்: புதுவையில் 2026-இல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். காரைக்காலில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி : புதுவை சுகாதாரத்துறை இயக்... மேலும் பார்க்க

பிரெஞ்சு தேசிய தினம் : உலகப் போா் நினைவுத் தூணுக்கு மரியாதை

காரைக்கால்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகப் போா் நினைவுத் தூணுக்கு அரசு அதிகாரி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மரி... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, கருக்களாச்சேரி கடலோர கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த... மேலும் பார்க்க

சாலைகளில் குப்பைக் குவியல்: பொதுமக்கள் அதிருப்தி

காரைக்கால் பகுதி சாலைகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகளை வீடுகள், நிறுவனங்களில்... மேலும் பார்க்க

காரைக்கால்: நியமன உறுப்பினருடன் பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது

புதுவை பேரவையில் நியமன உறுப்பினா் நியமனத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்கிறது. புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப... மேலும் பார்க்க