செய்திகள் :

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

post image

வருமான வரி தாக்கல் காலம் இது.

இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள் வருமான வரி தாக்கல் வலைதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

கடைசி தேதி என்ன?

வழக்கமாக, தனிநபர், இந்து கூட்டுக்குடும்பம், சங்கம் உள்ளிட்டோருக்குவருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆனால், இந்த ஆண்டு கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல்
வருமான வரி கணக்குத் தாக்கல்

ஒருவேளை, கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லையென்றால்...?

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, பிரிவு 139 (8A)-ன் கீழ், அடுத்த 48 மாதங்களுக்குள் அப்டேட்டட் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

இது முன்னால், 24 மாதக்காலமாக இருந்தது.

48 மாதங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய முடியுமானாலும், கூடுதலாக 60 - 70 சதவிகித வரி கட்ட வேண்டியதாக இருக்கும்.

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் என்ன?

பிரிவு 234A-ன் கீழ், கடைசி தேதிக்கு பின், வருமான வரி தாக்கல் செய்தால்... அதில் வருமான வரி நிலுவை இருந்தால்... தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு வருமான வரி நிலுவைக்கு 1 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

பிரிவு 234F-ன் கீழ், தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ய...

ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால், ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும்.

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க

Air India Crash : `விடை தெரியாத கேள்விகள்' - AAIB அறிக்கையும் விமர்சனங்களும் - என்ன நடக்கிறது?

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இற... மேலும் பார்க்க

திருச்சி: பயன்பாட்டுக்கு வந்த `பஞ்சப்பூர் பேருந்து நிலையம்'; வெளியூர், நகர் பேருந்துகள் இயக்கம்

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த... மேலும் பார்க்க

"இப்போதுதான் உயிரே வந்தது; அவரை கேரளாவிற்கு அழைத்து வருவோம்"- கேரள நர்ஸ் நிமிஷாவின் கணவர் பேட்டி

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதான்!

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வ... மேலும் பார்க்க

திருக்குறளே இல்லாத ஒன்றை 'குறள்'னு சொல்லி போட்டு இருக்காங்க! - ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கிய சான்றிதழில், இல்லாத ஒன்றை குறள் என அச்சிட்டு வழங்கியது புது சர்ச்சையைக் கிளப்ப... மேலும் பார்க்க