நேரில் பார்க்காமலேயே கல்யாணம்! - அழகிய நினைவலை | #ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என் பெயர் சி. கார்த்திகா. உலகப் புகழ் பெற்ற முருகன் வாழும் ஸ்தலமான பழனியம்பதியே ஊராகும்.
சுமார் 17 வயது இருக்கும் பொழுது என்னுடைய தந்தையார் அகால மரணம் அடைந்து விட்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பு மூத்த பெண்ணான என்னிடம் தொற்றிக் கொண்டது. பட்டப்படிப்பு முதுகலை பட்டம் முடித்து 2004 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
திருமணமே வேண்டாம் என்ற நிலையில் இருந்தேன் காரணம் சிறுவயதில் ஏற்பட்ட அந்த ஒரு வறுமை நிலை தான். இளமையில் வருமை கொடிதல்லவா நிற்பதை வாங்கி கொடுப்பதற்கும் படிப்பதற்கு தேவையான புத்தகங்களுக்கும் உடுத்துவதற்கு தேவையான உடைகளுக்கும் அண்ணல் பட்ட காலங்கள் அவை.
வாடகை வீட்டில் குடியிருந்தோம் எப்படியோ ஒரு வேலை கிடைத்து நல்ல ஒரு நிலைக்கு உயரும் பொழுது திருமணம் பற்றிய பேச்சு அடிபட்டது.
திருமணம் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்த நான் பின்னர் உடன் பணியாற்றுபவர்களின் உயர்ந்தவர்களின் சொற்களைக் கேட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.
அப்பொழுதுதான் தமிழ் மேட்ரிமோனி போன்ற வரன் தேடும் ஆன்லைன் வசதிகள் அறிமுகமாகி பிரபலமடைந்து கொண்டிருந்தது.

முதன்முதலில் சேலம் மாவட்டத்தில் சேர்ந்த ஒரு வரன் ஒத்து வருவது போல் தெரிந்தது ஏனென்றால் நான் அரசு உத்தியோகத்தில் இருப்பதினால் தமிழ்நாட்டில் உள்ளேயே வேலைவாய்ப்பு கொண்ட ஒரு மணமகனை பார்ப்பது சாலச் சிறந்தது என்ற முடிவில் இருந்தோம். அடுத்த நாள் என்ன தோன்றியது தெரியவில்லை நமக்கே தந்தையில்லை யார் நமக்கு இவர்களைப் பற்றி விசாரித்து சொல்வார்கள் என்ற நினைப்பில் என்னுடைய மேட்ரிமோனி அக்கவுண்டே நான் டெலிட் செய்து விட்டேன்.
பழைய மன நிலைக்கு சென்று வட்டேன். பிறகு வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த வரன்கள் பார்க்கத் தொடங்கி விட்டோம். பிறகு ஒரு போன் கால் வந்தது பேசிய நபர், ஜாதகம் புரிந்து போவதாகவும் மேற்கொண்டு பேச விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்கள். நான் என் அம்மாவிடம் சொல்லும் பொழுது மிகவும் தொலைவு அதிகமாக உள்ளது அவ்விடம் வேண்டாம் என்று தெரிந்தவர்கள் நானும் அவர்கள் பேச்சை கேட்டு அவ்வாறே இருந்து விட்டேன்.
இன்னொரு நாளில் ஜாதகம் பார்த்து ஆகிவிட்டதா என்று மற்றொரு போன் கால் வந்தது. என் மனதை தேற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் தானே சமாளிப்போம் என்று எண்ணி ஜாதகம் பார்த்தோம் பொருத்தம் இருப்பதாக சொன்னார்கள். மேற்கொண்டு பேசும் பொழுது தான் தெரிகிறது மணமகன் வெளிநாட்டில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். இது நமக்கு ஒத்து வராது என்று தோன்றிய பொழுது மணமகன் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்று தகவல் வந்தது அதை மறுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் பெரியவர்கள் வந்து பெண் பார்த்து விட்டு சென்றார்கள்.
மணமகனை நேரில் பார்க்க வேண்டும் என்று என் வீட்டில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவித்த பொழுது மணமகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் திருமணத்திற்கு மூன்று நாள் முன்பு தான் வருவார் என்றும் தகவல் கிடைத்தது. மணமகனே போட்டோவில் மட்டுமே பார்த்தேன். அன்று ஸ்கைப் என்னும் தொழில்நுட்பம் கொண்டு வெளிநாட்டில் இருந்தவரை பார்த்துக் கொண்டேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே திருமண ஏற்பாடுகள் நடந்தேறின திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் வைத்துத்தான் மணமகனே முதன் முதலில் பார்த்தேன். என் அம்மாவோட பெரும்பாலானவர்களுக்கு நன்முறையில் திருமணம் நடந்தேறுமா இருவரும் ஒருவருக்கொருவர் நன்முறையில் வாழ்வார்களா இவர்களுக்குள் ஏதேனும் சிக்கல்கள் வருமா என்று ஏனையோர் ஆயிரம் கேள்விகள் வைத்திருந்தாலும் எனக்குள் அதைவிட பல்லாயிரம் சந்தேகங்கள் இருந்தன. இருப்பினும் நேரில் பார்த்த பொழுது ஒருவித வெட்கம் என்னை சூழ்ந்து கொண்டது. இதுதான் பெண்மைக்கு உண்டான ஒரு பண்பு. திருமணம் நன்முறையில் நடந்தேறியது.
திருமணத்திற்கு பிறகு நான் கணவர் வீட்டாருடன் அவர்களின் சொந்த கிராமத்தில் வசிக்க ஆரம்பித்தேன். கிராம பின்புலம் இல்லாத நான் கிராம வாழ்க்கையை மிகவும் நேசித்தேன். ஆனால் உறவு சிக்கல்களுக்கு நிறைய ஆளானேன். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த என் கணவர் நாடு திரும்பி எங்களுடன் வசிக்க ஆரம்பித்தார். இன்று இரண்டு பெண்மணிகளுடன் சேலம் மாவட்டத்தில் என் வேலையை தொடர்ந்து கொண்டு அவரும் சொந்த தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என் பிள்ளைகளிடம் மற்றவர்களிடம் நாங்கள் நேரில் பார்க்காமலேயே கல்யாணம் செய்து கொண்டோம் என்று சொன்னால் நம்புவதில்லை நீங்கள் இருவரும் லவ் மேரேஜ் தான் என்கிறார்கள் என்ன செய்ய?
