செய்திகள் :

வேலைகளை இழுத்துப் போட்டு செய்தவருக்கு இதான் நிலை! - மறக்க முடியாத திருமணம் | #ஆஹாகல்யாணம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

திருவள்ளூரிலிருந்து என் ஊர் கோவைக்கு ரயிலில் வரும் போது கோவை நிறுத்தத்தில் நான் இறங்கியவுடன், ஒருவர் என்னருகே வந்து சிரித்து தம்பி நீ “சூரியா”வா என்று கேட்டார், நான் அவரை யார் என்று நினைத்தபடியே ஆம் என்பது போல் தலை ஆட்டினேன்.

“தம்பி நல்லா இருக்கியா , நான் தான் உங்க மாமா ‘சிவா’கூட வேல பாத்தவன் அவர் கல்யாணத்தில இருந்தன்ல நினைவு இல்லையா”என்றார் .

எனக்கு நினைவு வந்தது ,ஆன் ஆமா அண்ணா ‘சிவா’ மாமா கல்யாணத்தில நீங்க மாப்ள – பொண்னுக்கு கார் கொண்டு  வந்தீங்க “முருகன் அண்ணா” நல்லா இருக்கீங்களா அண்ணா என்றேன்.

“வாப்பா  என்னாச்சீ சாப்பிடலாம் என்று பிளாட்பார்மில் இருந்த கடையில் எனக்கு பாதாம் பால் வாங்கி தந்தார் , காசு நான் தர முயன்ற போது தர விடாமல் அவரே தந்தார்.

‘சிவா’ சார் நல்லா இருக்காங்களா , என் அப்பா-அம்மா பெயர் சொல்லி அப்பா-அம்மா எப்படி இருக்காங்க , ‘சிவா’சாருக்கு எத்தன குழந்தை என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

கிளம்பும் போது 500 ரூபாயை என் சட்டை பையில் தினித்து , ”தம்பி வீட்டுக்கு போகும் போது உங்க ‘சிவா’சார் அப்பாக்கு சாம்பர் வட பிடிக்கும் அவருக்கு வாங்கிட்டு போ அப்பறம் ‘சிவா’சார் குழந்தைக்கு ஏதாவது வாங்கி குடுப்பா” என்றார்.

‘முருகன் அண்ணாவிடம் இருந்து விடை பெற்று டேக்சியில் வீட்டுக்கு செல்லும் போது எனக்கு ‘சிவா’ மாமாவின் கல்யாண நிகழ்வு நினைவுக்கு வர துவங்கியது.

 2007 ஆம் ஆண்டு ‘சிவா’ மாமாவின் ரிசப்ஸன் மாலை 4.30 மணியளவில் ‘சிவா’மாமாவோடு அலுவலகத்தில் வேலை செய்யும் ‘முருகன்’ அண்ணா யாரிடமோ கார் வாங்கி காரை கல்யாண அலங்காரம் செய்து வந்து இருந்தார்.

அந்த காரில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டில் இருந்து கல்யாண மண்டபத்தில் விட்டார், 8-10 வயதில் இருந்த 5-6 (குழந்தைகள்) எங்களை மண்டபத்தில் விடும் போது ஒரு பேக்கரியில் நிறுத்தி யார் யாருக்கு என்ன பிடிக்குமோ உண்ண வாங்கி தந்தார்.

கல்யாணத்தில் ‘சிவா’ மாமா அலுவலக மேனேஜர் உடன் வேலை பார்ப்பவர்க்ளை காரை எடுத்துக்கொண்டு சென்று அவர்களை கூட்டி வருவது , வெளியூரிலிருந்து வந்தவர்களை பஸ் ஸ்டேன்ட், ரயில் நிலையத்தில் விடுவது. மேலும் ‘சிவா’ மாமா கூறிய வேலைகள் செய்வது , சமையல் ஆட்கள் ஏதேனும் வேண்டும் என்றால் போய் வாங்கி வருவது என்று ஒடிக்கொண்டே இருந்தார்.

‘சிவா’ மாமாவின் கல்யாணம் காதல் திருமணம் என்பதால் பெண் வீட்டாரிடம் ஏகப்பட்ட நிபந்தனைகள் டெக்கரேசன் , பாட்டு கச்சேரி, பெரிய கல்யாண மண்டபம் என்று நீண்டு கொண்டே போனது குழந்தையின் அழுகையை போல் நிற்க்காமல். எங்கள் குடும்பம் அப்போது பொருளாதாரத்தில் பெரிய சக்த்தியோடு நாங்கள் இல்லை.

எப்படியோ கல்யாண மண்டபம் வாடகை , சாப்பாடு செலவிற்க்கு எப்படியோ சமாளித்தார்கள், டெக்கரேசன் , பாட்டு கச்சேரி, கார் அலங்காரம் போன்றவற்றில் பணம் கையை பிசக்கியது.

ஒரு நாள் ‘சிவா’மாமா எங்கள் வீட்டில் பத்திரிக்கையில் சந்தனம் வைக்கும் நிகழ்வு நடந்து கொண்டு இருந்தது ,’சிவா’மாமா வீட்டிற்க்கு வந்தவர் “பாட்டு கச்சேரி, கார் அலங்காரம் எல்லாம் கூட வேலை பாக்குற ‘முருகன்’ அவன் ஊர்ல இருந்து ஆளுகள வர வைக்கிறன்னு சொல்லிட்டான் “ என்றார்.

               திருமண வேலைகளில் ‘முருகன்’ அண்ணா செய்து கொண்டு இருக்கும் போது மாப்ள வீட்டு மொய் எழுதும் ஆள் இருக்கையில் இல்லை அப்போது ‘முருகன்’அண்ணா என்னை அழைத்து பணத்தை வாங்கி வைக்க சொன்னார் அவர் என்னோடு அமர்ந்து மொய் நோட்டில் மொய் தந்து கொண்டு இருந்தவர்களின் பெயர்களை எழுதிய படி இருந்தார், என் உறவினர் ஒருவர் “தம்பி நீ யாருப்பா சொந்தக்காரன் மாறி உக்காந்து மொய் எழுதிட்டு இருக்க” என்றார். ‘முருகன்’அண்ணன் எதுவும் சொல்லாமல் எழுந்து போனார்.   

 திருமணம் முடிந்து ‘சிவா’ மாமா தனிக்குடித்தனம் சென்றார் சாமான்களை ஏற்றி செல்ல ஆட்டோ , லாரி பிடித்து எல்லா சாமான்களையும் எடுத்து ஏற்றி  புது வீட்டில் எல்லா சாமான்களையும் அடுக்கிவைக்க ‘முருகன்’ அண்ணாதான் உதவி செய்தார். திருமணம் முடிந்து ‘சிவா’ மாமா ஹனிமூன் செல்ல ‘முருகன்’ அண்ணாதான் ‘கார்’ விலை கம்மியாக பேசி ஏற்பாடு செய்து தந்தார்.  

                 நான் என் வீடு வந்தவுடன் குளித்து விட்டு ‘சிவா’மாமா வீட்டிற்கு சென்று ‘முருகன்’ அண்ணாவை பார்த்தேன் என்றேன். ‘சிவா’மாமா யாரு எந்த முருகன் “ என்றார். உங்க கல்யாணத்தில கார் கொண்டு வந்தாரு, அப்பறம் ஈவன்ட் டெக்கரேசன்’எல்லா ஹெல்ப் பண்ணாருல்ல அவரு” என்றேன். எந்த வித சந்தோசமோ , ஆச்சரியமோ இன்றி ‘பர்ச்சேஸ்’ முருகனா’ என்று தலை ஆட்டி விட்டு சென்று விட்டார் ‘சிவா’ மாமா.

                        ‘சிவா’மாமாவை பார்க்க எனக்கு அதிர்த்தியாக இருந்தது அவர் வாழ்வில் முக்கியமான நிகழ்வில் உதவியாக இருந்தவர் ‘முருகன்’ அண்ணா’ , அவரை பற்றி கூறும் போது ‘முருகன்’  நல்லா இருக்கானா ‘ என்று எதுவும் கேட்கவில்லை.

புதிதாக வளரும் மரம் சற்று கிளைகள் வளைந்து நேராக வளராது அப்போது கயிறு கட்டியோ , குச்சியை முட்டுக்கொடுத்தோ நேராக வளர செய்வோம்.  நம் வாழ்வு நேரின்றி பல இன்னல்களாக இருக்கும் போது இயற்கை நம் வாழ்வை நேராக்க   அனுப்பும் மனிதர்களை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுகிறோம். மற்றவர்களை ஏன் குறை கூற வேண்டும்.

                          நான் ‘முருகன்’அண்ணாவை ரயில் நிலையத்தில் சந்தித்த போது பாதாம் பால் வாங்கி தந்தார். 2007ல் ‘சிவா’மாமாவின் திருமணம் போது பல குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்ததை உண்ண வாங்கி தந்தார், நான் அன்று பாதாம் பால் குடித்தேன். அப்போது நான் விருப்பப்பட்டு பருகியதை இன்றும் நினைவு வைத்துள்ளார், மேலும் என் தாத்தாவிற்கு பிடித்த மெது வடை, என் குடும்ப உறிப்பினர்களின் பெயர்கள் என்று அனைவரையும் நினைவு வைத்துள்ளார்.

நான் ரயில் நிலையத்தில் ‘முருகன்’ அண்ணாவை சந்தித்த போது “நீங்க எப்படி அண்ணா இருக்கீங்க , எங்க இருக்கீங்க என்று கூட நான் கேட்கவில்லை , போன் நம்பர்கூட வாங்கவில்லை. திருமண பத்திரிக்கையில் பேர்போட்டு வரும் சொந்தங்கள் திருமணத்தில் பல குறை கூறி செல்கின்றனர். எந்த வித உறவு முறையும் இல்லாமல் ‘முருகன் அண்ணா’ ‘சிவா’ மாமாவின் கல்யாணத்தில் பேருதவியாக இருந்தார்.

                           ‘முருகன் அண்ணா’ குடுத்த 500ரூபாய் நோட்டை விரித்து பார்க்கிறேன் அதில் சிரிக்கும் காந்தி தாத்தாவின் புகைப்படம் என் மூஞ்சியில் அரைகிறது.

                         இப்போது எனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கின்றனர் நிச்சயம் அதற்குள் ‘முருகன் அண்ணாவை’ பார்த்து விடுவேன் இயற்கை எங்களை இணைக்கும் என்று நம்புகிறேன் , ‘முருகன் அண்ணாவை’ என் திருமணத்திற்குள் சந்திக்க வில்லை என்றாள் அவர் குடுத்த 500 ரூபாயை என் திருமணத்தின் முதல் மொய் பணமாக வைத்துக் கொள்வேன். 

                        மீண்டும் 2நாட்களில் திருவள்ளூர் கிளம்பப்போகிறேன் பயணத்தில் ‘முருகன் அண்ணாவை’ எதிர் பார்த்தபடி.

நேர்மையின் முன் தன் நெஞ்சே தன்னைச்சுடும்! | அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வேலையில்லா பட்டதாரி டு குடும்பஸ்தன்! - என் த்ரில் பயணம் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வெள்ளி சொம்பினால் வந்த பிரச்னை! - மறக்க முடியாத வலி | #ஆஹா கல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`ப்பா, யார் டா இந்த பொண்ணு! - திருமண மேக் அப் நினைவுகள் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க