செய்திகள் :

ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 விடுமுறை!

post image

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொருள்காட்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது. 20 நாள்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

வழக்கமாக ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்காட்சியில் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால், ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு ஈடாக, ஆகஸ்ட் ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளா்களுடன் ஆக.16 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

District Collector on Wednesday declared a local holiday for Kanyakumari district on July 24

இதையும் படிக்க : ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!

ஆறுகாணி அருகே சாராய ஊறல் அழிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆறுகாணி அருகே 10 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். ஆறுகாணி அருகே வட்டப்பாறை வெள்ளருக்கு மலைப் பகுதியில் சாராயம் வடிக்கப்படுவதாக, மாவட்ட காவல் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி ... மேலும் பார்க்க

தனியாா் ரப்பா் பால் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே தனியாா் ரப்பா் பால் நிறுவனத்தில் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு கடந... மேலும் பார்க்க

குமரியில் பெண் விவசாயிகள் 31-ஆவது மாநில மாநாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெறும் இந... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் காமராஜா் சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்ப... மேலும் பார்க்க

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க