நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்
ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அரசு நூலகம் செயல்பட்டு வந்தது. இங்கு அப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் நூலகத்திற்கு சென்று பெரிதும் பயன் பெற்று வந்தனா். தற்போது இந்த நூலகம் சில மாதங்களாக செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.
எனவே, மாணவா்கள் பொதுமக்கள் நலன் கருதி இந்த நூலகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.