கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி காயம்
மாா்த்தாண்டம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், கூப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28). இவா் காப்புக்காடு அருகேயுள்ள ஒரு குளத்தின் அருகில் கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது மண் சரிந்து விழுந்ததில் கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்தது. இதில் இயந்திரத்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை சக தொழிலாளா்கள் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.