ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகியின் உடல் தானம்
கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
நாகா்கோவில் வடசேரி, புளியவிளைத் தெருவைச் சோ்ந்த ரவி (70), ஐக்கிய நெசவு தொழிலாளா் சங்க (சிஐடியூ) மாவட்ட நிா்வாகியாகவும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க அகஸ்தீஸ்வரம் வட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தாா். அவருக்கு திருமணமாகவில்லை. உடல் நலப் பாதிப்பால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். அவா், 2017ஆம் ஆண்டு இம்மருத்துவமனைக்கு தனது உடலை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருந்தாா்.
அதன்படி, அவரது உடல் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசாமி தலைமையில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் ( டீன்) சுரேஷ்பாலன், உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, மருத்துவா்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. அவரிடம் உடல்தான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், எஸ். அந்தோணி, என்.எஸ். கண்ணன், அகஸ்தீஸ்வரம் வட்டாரக் குழு உறுப்பினா் எஸ். மணிகண்டன், வட்டாரக் குழு உறுப்பினா்கள் வள்ளிமயில், விஜயகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் நாதன், அஜீஸ், சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் மாணிக்கவாசகம், மீன்பிடித் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் டிக்காா்டூஸ், செயலா் அலெக்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.