Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’...
ஜார்க்கண்டில் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஜார்க்கண்டு மாநிலத்தில் 19 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கர்ஹவா, பலாமு, சத்ரா, லடேஹர், கொடர்மா மற்றும் ஹசாரிபாக் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 15) காலை 8.30 மணி முதல் நாளை (ஜூலை 16) காலை 8.30 மணி வரை ’ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கும்லா, சிம்டேகா, லோஹர்தாகா, லடேஹர், குந்தி, மேற்கு மற்றும் கிழக்கு சிங்பம், சராய்கேலா, ராம்கார், பொகாரா, தன்பாட், கர்ஹவா, பலாமு, கொடர்மா, கிரிதீஹ், ஜம்தரா, தியோகார், தும்கா மற்றும் ராஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 16 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ராஞ்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு நாளை (ஜூலை 16) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு சிங்பம் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வரும் சூழலில், கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரையில் ஜார்க்கண்டில் வழக்கத்தை விட 62 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கல்லூரிக்குள் மாணவிக்கு கத்திக்குத்து!