காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!
சின்ன திரையில் நாயகனாக நடித்துவரும் ஆஷிஷ் சக்ரவர்த்தி தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2020ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சூர்ய வம்சம் தொடரில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் சக்ரவர்த்தி. இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியின் முத்தழகு தொடரில் நாயகனாக நடித்தார்.
இந்தத் தொடரில் தமிழ் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். குறிப்பாக பல இளம் பெண்கள் ஆஷிஷ் சக்ரவர்த்திக்கு ரசிகைகளாக மாறியுள்ளனர்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் சமந்தி என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இதிலும் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இதனிடையே தனது காதலியை ரசிகர்களுக்கு நடிகர் ஆஷிஷ் சர்க்ரவர்த்தி அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஆஷிஷ் சக்ரவர்த்திக்கு நைனிஷா ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவரும் சின்ன திரை நடிகராவார். தெலுங்கில் பிரம்மமுடி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது இரு பிரபலங்களும் இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க |எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!