செய்திகள் :

Saroja Devi: `நடிகர் சங்க திறப்பு விழாவுக்கு அவங்க இல்லாம போனது ரொம்ப ரொம்ப வருத்தம்' - கார்த்தி

post image

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார்.

சினிமா மட்டுமின்றி தன் வாழ்வில் பொதுசேவையும்  செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று(ஜூலை 15) காலை 11.30 மணிக்கு அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

சரோஜா தேவி
சரோஜா தேவி

இந்நிலையில் நேற்று அவரின் உடலுக்கு நடிகர்களான விஷால், கார்த்தி, அர்ஜுன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு

அஞ்சலி செலுத்தியப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ சரோஜா தேவி அம்மா அவர்களின் இறப்பு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பேரிழப்புதான்.

அவருடன் அமர்ந்து நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறேன். அவருக்கு இணையாக யாரும் இருக்க முடியாது.

கண்களால் பேசக்கூடிய ஒரு நடிகை.  "சரோஜா தேவி அம்மாவின் கண்கள் பொக்கிஷம். அந்த கண்கள் யாருக்குப் போய் சேரப்போகிறது  என்பதைப் பார்க்க மிகவும்  ஆசையாக இருக்கிறேன். “ என்றிருக்கிறார்.

விஷால்
விஷால்

 ‘என்னப்பா பில்டிங் கட்டி முடிச்சிட்டீங்களா?'

தொடர்ந்து பேசிய கார்த்தி, “   பெரிய ஆளுமை கொண்ட  நபர் அவர்.  50 வருடங்களுக்கு மேல் நடிகையாக  இருந்திருக்கிறது. நடிகர் சங்கத்தில் நாங்கள் இருப்பதால் மாதம் ஒரு முறையாவது ஃ போனில் பேசிவிடுவோம்.

 ‘என்னப்பா பில்டிங் கட்டி முடிச்சிட்டீங்களானு ‘அடிக்கடி கால்  பண்ணி கேட்பார்கள். திறப்பு விழாவுக்கு அவர்  இல்லாமல் போனது ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது”  என்று   பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: " `லியோ' படத்திற்கு பிறகு என்னுடைய சம்பளம்..' - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க

'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' - சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்

பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்' படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஜூலை 13-ம் தேதி க... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: 'சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்'- லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “ நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். அவர் எனக்கு 'லியோ' படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, கோவை பைக் பயணம்; மறதியில் வடிவேலு, மனப்போராட்டதில் ஃபகத்; வெளியானது மாரீசன் ட்ரெய்லர்!

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இழகுவான திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். நாகர்கோவ... மேலும் பார்க்க