செய்திகள் :

அமீர் கானுடனான திரைப்படம் உலகத்தரமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ்

post image

நடிகர் அமீர் கான் உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கானின் காட்சி குறைவாக இருந்தாலும் காத்திரமாக இருக்கும். இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை இயக்குகிறேன். அதன்பின், விக்ரம் - 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்து வரிசையாக படங்கள் இருந்தாலும் கைதி - 2க்கு பின் நடிகர் அமீர் கானுடன் இணைவேன். அப்படம் இந்திய சினிமா என்கிற எல்லைத் தாண்டி உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தண்டட்டி இயக்குநருடன் இணையும் கவின்!

director lokesh kanagaraj about his next collaborate movie with actor aamir khan

காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

சின்ன திரையில் நாயகனாக நடித்துவரும் ஆஷிஷ் சக்ரவர்த்தி தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ... மேலும் பார்க்க

7ஜி ரெயின்போ காலனி - 2 டீசர் அப்டேட்!

7ஜி ரெயின்போ காலனி - 2 திரைப்படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி மாபெரும் வெற்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!

அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா, வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து எதிர்நீச்சல் -2 தொடரில் பேசப்பட்டதால், இத்தொடரின் இயக்குநர் திருச்செல்வத்துக்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவி... மேலும் பார்க்க

இந்தியத் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல யூடியூபர்!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் - அமெரி, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகனின் புதிய திரைப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் அறிமுகமாகின்றார். துபையைச் சேர்ந்தவர் யூடியூபர் காலித... மேலும் பார்க்க

ரஜினியிடம் கதை சொன்ன நித்திலன்!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் நடிகர் ரஜினிக்கு கதை சொன்னதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விஜய் சேதுபதி - நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது... மேலும் பார்க்க

ஜீவா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் ஜீவாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் ... மேலும் பார்க்க