டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவு!
Shubhanshu Shukla: `கடலில் இறங்கியது’ - விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பினார் சுபன்ஷு சுக்லா
சுபன்ஷு சுக்லா வெற்றிகரமாக விண்வெளியில் இருந்து பூமி திரும்பியுள்ளார்.
1984-ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்றது இதுவே முதல்முறை.
இவர் பயணம் செய்த ஃபால்கான் 9 ராக்கெட், கடந்த ஜூன் 25-ம் தேதி, அமெரிக்காவின் ஃபோளரிடாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் பயணம் செய்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு அடுத்த நாள் (ஜூன் 26-ம் தேதி) விண்வெளி நிலையத்தை அடைத்தனர்.

இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்திய ஃபால்கான் 9 ராக்கெட் ஸ்பெக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஆகும். இந்த திட்டத்தின் பெயர் 'Axion 4'.
சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய பிரதமர் மோடி, கல்லூரி மாணவர்களிடம் பேசினார்.
மேலும், அவர் அங்கே இந்தியா சார்பாக விண்வெளி நிலையத்தில் ஒரு சில ஆய்வுகளை மேற்கொண்டார்.
அவரது பயண நாள்கள் முடிந்து, இப்போது, அவர் விண்வெளி பயணம் முடிந்து பூமிக்கு திரும்பி உள்ளார்.
நேற்று கிளம்பிய ராக்கெட், தற்போது பூமியை அடைந்துள்ளது. அதில் வந்த நால்வரும் பத்திரமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.