செய்திகள் :

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

post image

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். கணவர், மகளுடன் ஏமனில் வசித்துவந்தார். 2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக டாமி தாமஸ் மற்றும் மகளும் கேரளா திரும்பினர். நிமிஷா மட்டும் ஏமன் நாட்டில் தனியாக தங்கி வேலைசெய்துவந்தார். இதற்கிடையே ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு தனியாக கிளீனிக் ஆரம்பித்தார் நிமிஷா. நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தலால் அப்துல் மஹ்தி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தலால் அப்துல் மஹ்தி

இதற்கிடையே 2017 ஜூலை 25-ம் தேதி தலால் அப்துல் மஹ்தி-க்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார் நிமிஷா பிரியா. இதில் தலால் அப்துல் மஹ்தி இறந்துவிட்டார். தப்பிக்க முயன்ற நிமிஷா போலீஸில் சிக்கினார்.  அந்நாட்டுச் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆணை நிமிஷா அடைக்கப்பட்டிருந்த சிறைக்கும் அனுப்பப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற 'சேவ் நிமிஷா பிரியா இண்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மேலும், நிமிஷாவை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியா

இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. மரண தண்டனையை நிறுத்திவைப்பது சம்பந்தமாக கொலையான தலால் அப்துல் மஹ்தி-யின் குடும்பத்தாருடன் கேரளாவைச் சேர்ந்த சன்னி பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முசல்யார் முயற்சியால்,  ஏமனில் சமரச பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில், தயாநிதி எனப்படும் பிளட் மணி பெற்றுக்கொண்டு நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்க தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது... கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மாண... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க