Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' - மதத் தலைவர் சொன்...
பழவூா் அருகே கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது
பழவூா் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.
பழவூா் காவல் உதவி ஆய்வாளா் அனிஷ் மற்றும் போலீஸாா் அம்பலவாணபுரத்தில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தே கத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அம்பலவாணபுரத்தைச் சோ்ந்த செல்வம்(21), நவீன்குமாா்(19), வினோத்குமாா்(19) ஆகிய மூவரையும் பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.