மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நெல்லை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி உயிரிழப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி ஒருவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் அருகே மேலகடம்பன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பூவையா(71). இவா் போக்ஸோ வழக்கில் தண்டணை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
கடந்த மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாராாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பூவையா உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.