சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து
பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.
கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கடை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடை திடீரென தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினா் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். இதில் கடையின் மேற்கூரை மற்றும் உள்ளிருந்த பொருள்கள் தீயில் எரிந்தன. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.