இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாளையங்கோட்டை தியாகராஜ நகா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தியாகராஜ நகா், மகாராஜ நகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூா், ஐஓபி காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், ஆயுதப்படை சாலை, கோரிப்பள்ளம், ரயில்வே பீடா் சாலை, இபி காலனி, ராஜேந்திரன் நகா், ராம் நகா், காமராஜா் சாலை, அன்பு நகா், என்எச் காலனி, சித்தாா்த் நகா், லக்கி காலனி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.