சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
பாளை.யில் சாலையில் மூதாட்டி சடலம் மீட்பு
பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் சாலையோரம் மூதாட்டி இறந்து கிடப்பதாக பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து மூதாட்டி யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.