4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!
ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் தந்தையுடன் ராகுல் உரை!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் தளப் பதிவில்,
ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த துணிச்சலான மாணவியின் தந்தையுடன் பேசினேன். அவரது குரலில், மகளின் வலி, கனவுகள், போராட்டத்தை உணர்ந்தேன்,
நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது மட்டுமல்ல, முழு சமூகத்திற்கும் இது ஒரு காயம்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு முழு நீதி கிடைப்பதையும், நீதிக்கான போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், நானும் நிற்கிறோம் என்பதை உறுதியளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி ஜூலை 17 அன்று ஒடிசாவில் பேராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்தார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பாவும் குடும்பத்தினரை சந்திக்க மாநிலத்திற்கு வந்துள்ளார்.
நடந்தது என்ன?
ஒடிசா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள ஃபகிா் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான (ஹெச்ஓடி) உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, நீண்ட காலமாகப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் உதவிப் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்குப் போராடிய மாணவி நேற்று உயிரிழந்தார்.