உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
கவினின் புதிய பட படப்பிடிப்பு துவக்கம்!
நடிகர் கவின், பிரியங்கா மோகன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான வெளியீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதனை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளார்.
தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

இந்த நிலையில், இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் இணைந்துள்ள பிற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நிவின் பாலிக்கு ஜோடியான இன்ஸ்டாகிராம் பிரபலம்!