மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்ட...
விறுவிறுப்பான சூர்யா - 46 படப்பிடிப்பு!
நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் மீண்டும் லக்கி பாஸ்கர் படத்தின் தொழிநுட்பக் குழுவினர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதில் இளமையான தோற்றத்தில் சூர்யா நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!