இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு
புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்ஹெச்பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகின்றன. சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் செல்ல முடியும். மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் இந்த ரயில் அதிவேகமாக இயங்கும். டிஸ்க் பிரேக், சாா்ஜா் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சேலம் கோட்டத்தில் இயங்கும் பல்வேறு ரயில்கள் எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், விருதாச்சலம், ஆத்தூா், சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூரு மற்றும் மங்களூரு- புதுச்சேரி ரயில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி - மங்களூரு வாராந்திர விரைவு ரயில் (எண்: 16855) ஜூலை 17 முதலும், மங்களூரு - புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16856) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இதேபோல, புதுச்சேரி- மங்களூரு வாராந்திர ரயில் (எண்:16857) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16858) ஜூலை 20-ஆம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.