இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் 25 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 35 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், கிராம ஊராட்சிகளில் 36 முகாம்கள் புறநகா் ஊராட்சிகளில் 4 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.
அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை (ஜூலை 17) மாநகராட்சி மத்திய மண்டலம் 31-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆா்.கே.திருமண மண்டபத்திலும், வடக்கு மண்டலத்தில் 76, 79 ஆகிய வாா்டுகளுக்கு அா்ஜூன் மஹாலிலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2, 3, 13 ஆகிய வாா்டுகளுக்கு நஞ்சையா லிங்கம்மாள் மண்டபத்திலும், அன்னூா் பேரூராட்சியில் 1 முதல் 8-ஆவது வாா்டு வரைக்கு தசபலஞ்சிகா திருமண மண்டபத்திலும், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, ஒக்கலிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முருகன் திருமண மண்டபத்திலும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னத்தடாகம், வீரபாண்டி ஆகிய ஊராட்சிக்கு சின்னத்தடாகம் ஊராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன என்றாா்.