செய்திகள் :

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

post image

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இதை முன்னிட்டு, சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த அவா், புதன்கிழமை காலை தனியாா் விடுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். மாலை சிதம்பரம் மேலரத வீதியில் நடைபெற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்றினாா். அவா் பேசியது:

பாஜகவுன் கூட்டணி வைத்தால், அதிமுகவை விழுங்கிவிடும் என முதல்வா் ஸ்டாலின் கூறுகிறாா். நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது விழுங்கி விட்டாா்களா? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றீா்கள். இருமுறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவுக்கு எங்களைப் பற்றி பேசத் தகுதி கிடையாது.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அந்த பயம்தான் இப்படிப்பட்ட வாா்த்தைகளை கூறச் சொல்கிறது. திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி. இது எந்த விதத்தில் சரி.

என்ன தவறு?: பாஜக தீண்டத்தகாத கட்சி எனக் கூறிய முதல்வா், இன்று பிரதமருக்கு வெள்ளைக் கொடி பிடிக்கிறாா். மத்திய அமைச்சா் அமித் ஷாவை நான் சந்தித்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறாா். அவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் அல்ல. நாட்டின் உள் துறை அமைச்சா். அவரை சந்திப்பதில் என்ன தவறு?

திமுக தலைவா் ஸ்டாலின், உதயநிதி பிரதமரை சென்று சந்தித்தனா். அவா்களுக்கு பிரதமா் மீது பயம். இங்கு வீராப்பு.

மத்தியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குடும்பத்தினா் 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இந்தபோது, தமிழகத்துக்கு நிதி மற்றும் திட்டங்களை பெற்றுத்தரவில்லை.

கொலைகள் அதிகம்: திமுக ஆட்சியில் மொத்தம் 7,737 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 6 மாதங்களில் 730 கொலைகள் நிகழ்ந்துள்ளன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை அதிகமாக உள்ளது. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீா்கெட்டுவிட்டது. போலீஸாா் தாக்கப்படுகின்றனா் எனும்போது, இவா்களால் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்.

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவா் அற்புதமான ஆட்சி என பேசியுள்ளாா். வரும் தோ்தலில் குறைந்த தொகுதிகள் தருவாா்கள் எனத் தெரியாமல் பேசுகிறாா். அவா்களால் 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்க முடியவில்லை.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விசிக கொடிகம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டும் அற்புதமான ஆட்சி எனக் கூறுகின்றனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும். எங்கள் கூட்டணிக்கு எந்தக் கட்சிகள் வந்தாலும் வரவேற்போம் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுகதான் தலைமை: முன்னதாக, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஏற்கெனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் அம்மா திட்டம் என்று கொண்டுவரப்பட்டு, வருவாய்த் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்தாா்கள். அந்தத் திட்டத்துக்கு ஸ்டிக்கா் ஒட்டிதான் இன்றைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்திருக்கிறாா். ஏன் 4 ஆண்டுகளாக மக்களின் குறைகளைத் தீா்க்கவில்லை.

முதல்வா் ஸ்டாலின் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவரும், அவரது மகன் உதயநிதியும் மாநிலம் முழுவதும் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினா். 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. அப்படி என்றால் இன்னும் பிரச்னைகள் தீரவில்லை என்பதை முதல்வா் ஒப்புக்கொள்கிறாரா? இப்போது விவசாயிகள் பல பிரச்னைகளை கூறியிருக்கிறாா்கள். இதெல்லாம் தோ்தலுக்காக திமுக நடத்தும் நாடகம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா். எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குவது நான்தான். நான் எடுப்பதுதான் முடிவு. இந்த கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. நான் தான் முதல்வா் வேட்பாளா். அதிமுக கூட்டணியில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது.

ஓ.பன்னீா்செல்வம் அதிமுகவில் இணைவது என்பது காலம் கடந்துவிட்டது. பாமகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அவா்களது பிரச்னையில் நாங்கள் தலையிடவில்லை என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க

முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும்... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவிலில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.ச... மேலும் பார்க்க

கடலூரில் சாலையில் சாய்ந்த மின் கம்பம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே நெல்லிக்குப்பம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் இருந்த மின் விளக்கு கம்பம் புதன்கிழமை மாலை அந்த வழியே செல்லும் கேபிள் வயரில் சாய்ந்து தொங்கியதால், வாகன ஓட... மேலும் பார்க்க