அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா்.
விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை வந்தாா். அப்போது கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உடனிருந்தனா்.
இந்த நிகழ்வில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை சம்பந்தமாக ஏடிஜிபி ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.