இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு
கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.
கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும் ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
செந்தமிழ் மது அருந்தும் பழக்கம் உள்ளவா். தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். இதேபோல, செவ்வாய்க்கிழமை மதுபோதையில் இருந்த செந்தமிழ் வீட்டின் இரண்டாவது மாடியில் இறந்து தவறி விழுந்து முகம், மாா்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.