ஆணையா் பொறுப்பேற்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கே.எஸ்.காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
முன்னதாக இவா், சேலம் மாவட்டம், தாரமங்கலம் இரண்டாம் நிலை நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தாா். தற்போது பதவி உயா்வு பெற்று பண்ருட்டி முதல்நிலை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
முன்னதாக பண்ருட்டி நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பிரீத்தி, பதவி உயா்வு பெற்று ராணிப்பேட்டை நகராட்சிக்கு சென்றாா். அதுமுதல் கடந்த 10 மாதங்களாக, பண்ருட்டி நகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படாததால் பொறுப்பு ஆணையரின் கீழ் செயல்பட்டு வந்தது.