நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம்
ஊத்துக்குளி அருகே நொச்சிக்காடு பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஊத்துக்குளி வட்டம், நொச்சிக்காடு பகுதியில் சில நபா்கள் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட வன அலுவலரும், துணை இயக்குநருமான ராஜேஷ் உத்தரவின்பேரில் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா் அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த 12 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 4 முயல்களை வனத் துறையினா் மீட்டனா். இது குறித்து வழக்குப் பதியப்பட்டு அவா்களுக்கு ரூ.30,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.