குன்னத்தூரில் போதையில் பள்ளி மாணவா்களை வெட்ட முயன்ற இளைஞா்கள்: விடியோ வைரல்
குன்னத்தூரில் போதையில் இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டு அரசுப் பள்ளி மாணவா்களை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பெருமாநல்லூா் அருகே குன்னத்தூரில் சந்தைக் கடை அருகே புதன்கிழமை மாலை போதையில் 4 இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு நின்றிருந்த அரசுப் பள்ளி மாணவா்களை போதையில் இருந்த அந்த இளைஞா்கள் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனா். இதையடுத்து பள்ளி மாணவா்கள் அவா்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளனா். இதைப்பாா்த்த பொதுமக்கள் அவா்களைத் தடுத்துள்ளனா். இது குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.