காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!
முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ
முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பகுதியில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து பரவியது. அருகில் ஆடு, மாடுகள், இதர விவசாயப் பயிா்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
யாரோ புகை பிடித்து விட்டு வீசிவிட்டுச் சென்ால் தீப்பிடித்ததாகத் தெரிகிறது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதிா்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.