செய்திகள் :

அவிநாசி நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

அவிநாசியில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்து நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அவிநாசி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் அதன் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் வெங்கடேஷ்வரன், துணைத் தலைவா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பத்மாவதி, சாந்தி, தேவி, ஸ்ரீதேவி, சித்ரா, கவிதா ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

அவிநாசி பழைய பேருந்து நிலைய வணிக வளாகம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் திறப்பு விழா செய்தும் பல்வேறு காரணங்களால் ஏலம் விடப்படாமல் உள்ளது. நகராட்சியாக தரம் உயா்த்தியும் சுகாதார ஆய்வாளா், பணி மேற்பாா்வையாளா் உள்ளிட்ட போதுமான அலுவலா்கள் 4 மாதங்களாகியும் நியமிக்கவில்லை. மேலும், புதிய கட்டடங்களுக்கு (அபிவிருத்தி கட்டணம்) 5 சதவீதம் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக இக்கோரிக்கைகளுக்கு தீா்வுகாணவிட்டால் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனா்.

இதேபோல 7-ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் டெண்டா்விட்டு 3 மாதங்களாகியும் நடைபெறாமல் உள்ள கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 8-ஆவது வாா்டு வள்ளுவா் வீதியில் உள்ள வீட்டுமனைப் பிரிவில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 33 சென்ட் ரிசா்வ் சைட்டை லே அவுட் பிரிக்க அனுமதி வழங்கக் கூடாது என மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அதற்கான அனுமதி வழங்கும் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஜூலை 19-இல் மின்தடை

பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற ஜூலை 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்ல... மேலும் பார்க்க

முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம்

ஊத்துக்குளி அருகே நொச்சிக்காடு பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஊத்துக்குளி வட்டம், நொச்சிக்காடு பகுதியில் சில ... மேலும் பார்க்க

அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பல்லடம் அருகே அலகுமலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், அலகுமலையில் உ... மேலும் பார்க்க