`சரக்கு டிராக்டரில் ADGP சபரிமலை பயணம்' - கோர்ட் கண்டனம்; `டிரைவர் பலிகடா' - கேர...
பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7,499-க்கு விற்பனை
திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு விற்பனையானது.
திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,281 விவசாயிகள் 346 மெட்ரிக் டன் பருத்தியை கொண்டு வந்தனா்.
ஏலத்தில், கும்பகோணம், கொங்கணாபுரம், திருப்பூா், பண்ருட்டி, செம்பனாா்கோயில் பகுதி வணிகா்கள் பங்கேற்றனா். ஆன்லைன் முறையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ரூ.7,499 க்கும் சராசரியாக ரூ.7,346 க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில், ரூ. 2.54 கோடி மதிப்பில் 3,465 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.
நிகழாண்டில் திருவாரூா் இ-நாம் (ஆன்லைன் ஏலம்) சந்தையில் இதுவரை 9,493 விவசாயிகளின் 13,879 குவிண்டால் பருத்தி விற்பனை செய்யப்பட்டு, அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.9.17 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.