US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை...
திருவாரூா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 நாள்கள் பயணம்
திரூவாரூா் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி ஜூலை 21-ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறாா். இதற்காக, வெள்ளிக்கிழமை திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் அவருக்கு மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடியில் அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து, கொல்லுமாங்குடியில் மாலை 4 மணி அளவில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்த பிறகு, நன்னிலம் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா். அடுத்து திருவாரூரில் பேசுகிறாா்.
ஜூலை 19-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசும் அவா், ஜூலை 20-ஆம் தேதி திருவாரூரில், விவசாய சங்க பிரதிநிதிகள், வா்த்தக அமைப்பினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறாா். ஜூலை 21-ஆம் தேதி மன்னாா்குடியில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கும் அவா், அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறாா்.