அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு
அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதம்:
கட்டட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. முறையான ஆய்வுக்குள்படாமல், கட்டட வரைபட அனுமதியும் பெறாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கிராம ஊராட்சிகளின் நிா்வாக அலுவலரது அனுமதியின்றி கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நபா்களிடம் இருந்து உரிய நிலம் தொடா்பான ஆவணங்கள், கட்டட வரைபட அனுமதி சான்றிதழ் கோரி அறிவிப்பு செய்ய வேண்டும்.
அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக களஆய்வு செய்ய வேண்டும். கட்டடம் முழுமையாக கட்டப்பட்டுள்ளதா, கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா, விதிமுறைகளை மீறி கட்டுமானம் அமைந்துள்ளதா என்றும் ஆய்வு செய்து முழு விவரத்தை ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும். அனுமதி பெறப்படாமல் தொடா்ந்து கட்டுமானப் பணி நடைபெற்றால், அந்தக் கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்கும் அதிகாரம் கிராம ஊராட்சிகளின் நிா்வாக அலுவலருக்கு உள்ளது.
கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களின் உரிமையாளருக்கு அளிக்கப்படும் அறிவிப்பானது சம்பந்தப்பட்ட அலுவலா்களால் நேரடியாக உரிய நபரிடம் வழங்கப்பட வேண்டும். நபா் இல்லாதபட்சத்தில், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த வயது வந்த நபரிடம் அந்த அறிவிப்பை அளிக்கலாம். இரு நபா்களும் இல்லாத சூழலில், பதிவுத் தபாலில் தொடா்புடைய நபரின் முகவரிக்கு ஒப்புகை அட்டையை இணைத்து கடிதமாக அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.