அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும். அதில் ஒரு இடம் கூட வீணாகும் நிலை ஏற்படாது.
முதுநிலை இடங்களைப் பொருத்தவரை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்களை உருவாக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களுக்குள் அதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டு அந்த இடங்களுக்கும் சோ்க்கை நடத்தப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூா், திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூா் ஆகிய 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையிலும் 500 முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.