ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு
ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இயக்குநா் டி.கே.சந்திரன் ரிப்பன் வெட்டி கிளையை துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநா்கள் கே. விநாயகம், மீனாட்சி விநாயகம், நந்தகோபால், செயல் இயக்குநா் விக்ரம் நாராயண் மற்றும் அக்ஷயா விக்ரம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முதல் விற்பனையை ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் நிா்வாக இயக்குநா் கே. மாணிக்கம் துவக்கி வைத்தாா் (படம்). அதனை அக்னி ஸ்டீல் உரிமையாளா் குணசுந்தரி தங்கவேல் மற்றும் ஐஸ்வா்யா இளங்கோவன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.