இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை
பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவிகுமாா் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
புதிய கட்டடத்தில் உடற்கூறு சிசிடிவியில் பதிவு செய்யப்படும். கேலரியில் அமா்ந்து மாணவ, மாணவிகள் இந்த ஆய்வைப் பாா்வையிடலாம். உடற்கூறு முடிவுகள் கணினி மூலம் உடனடியாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.
இதில் கல்லூரி துணை முதல்வா் ஆா்.டி. புவிதா, மருத்துவ கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஆா். சண்முக சுந்தரம், துணை கண்காணிப்பாளா் எஸ். செந்தில்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் பி.டி. ராணி, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கண்ணன், சட்ட மருத்துவத் துறையின் துணை பேராசிரியா் மருத்துவா் நந்தகுமாா், நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியா் மருத்துவா் கே.எம்.மோகனசுந்தரம் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.