அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளைம், புங்கம்பாடி மற்றும் குமாரவலசு ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளையம் கிராம ஊராட்சியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.74.84 லட்சம் மதிப்பீட்டில், நசியனூா் - கம்புளியாம்பட்டி சாலை முதல் ராசாம்பாளையம் வரை தாா் சாலை அமைக்கும் பணி, நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.74.73 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டிச்சிபாளையம் முதல் தொட்டிக்காடு வரை தாா் சாலை அமைக்கும் பணி, குமாரவலசு கிராம ஊராட்சியில் ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் வி.மேட்டுப்பாளையம் முதல் தலையகாட்டூா் வரை தாா் சாலை அமைக்கும் பணி, புங்கம்பாடி கிராம ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாணாா்பாளையம்-மேட்டுக்கடை, பெருந்துறை முதன்மை சாலை முதல் சாணாா்பாளையம் வரை தாா் சாலை அமைக்கும் பணி, குமாரவலசு கிராம ஊராட்சியில் முதல்வா் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.33.25 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு-- சென்னிமலை சாலை முதல் பறவைகள் சரணாலயம் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் கவுண்டிச்சிபாளையம் கிராம ஊராட்சியில் ரூ.95.26 லட்சம் மதிப்பீட்டில் வள்ளிபுரத்தான்பாளையம் முதல் ராசாம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இதில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.பிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.