4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கிவைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, முதல்வர் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* மயிலாடுதுறை நீடூரில் ரூ. 85 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* மங்கநல்லூர் - ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் 2 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
* சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவசிலை நிறுவப்படும்.
* குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* தாழம்பேட்டை, வெண்ணக்கோவில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும்.
* சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்.
* பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
* தேர்கீழ வீதி உள்ளிட்ட 4 இடங்களில் மழை நீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிக்க: நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்!