செய்திகள் :

தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!

post image

ஒடிசாவில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டி, ஒடிசா பேரவை வளாகத்தில் போராட்டம் செய்தவர்களால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான உதவிப் பேராசிரியா் சமீரா குமார் சாஹு, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி 3 நாள்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு போதிய நடவடிக்கை எடுக்காத, ஆளும் பாஜக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளக் கட்சியினர் ஒடிசா பேரவை வளாகமான விதான் சபாவுக்கு வெளியே மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைமைச் செயலகம் லோக் சேவா பவனில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ள பிஜு ஜனதா தள கட்சி, பாலாசோர் மாவட்டத்தில் 8 மணி நேர கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தியது.

போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி, நாளை (ஜூலை 17) முழு கடையடைப்பு போராட்டத்துக்கும், பேரணிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Tear gas, water cannon as protest rocks Odisha over student's self-immolation

இதையும் படிக்க :ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி: 3 நாள்கள் உயிருக்குப் போராடி மரணம்

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சாதனைக்குப் பாராட்டு: மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றம்!

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதை வரவேற்று மத்திய அமைச்சரவை புதன்கிழமை(ஜூலை 16) தீர்மானம் நிறைவேற்றி... மேலும் பார்க்க

தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள, சீக்கியர்களின் புனிதத் தலமான தங்கக் கோயிலுக்கு மூன்றாவது முறையாக, இன்று (ஜூலை 16) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் உள்ளாட்சித் தேர்தல்! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான எல்லையானது தற்காலிகமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்டில் வரும் ஜூலை 24 மற்றும் 28 ஆகிய தேதிக... மேலும் பார்க்க