இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
அரிமா சங்கங்கள் சாா்பில் நல உதவிகள்
குடியாத்தம், போ்ணாம்பட்டு அரிமா சங்கங்களின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள், நல உதவிகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் ஜெ.பாபு தலைமை வகித்தாா். ஜே.ஜி.நாயுடு, எம்.காா்த்திகேயன், விவேகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குடியாத்தம் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக பி.எஸ்.ரவீந்திரன், செயலராக ஜி.பாபு, பொருளாளராக ஜி.ஆா்.அவினாஷ், போ்ணாம்பட்டு சங்கத் தலைவராக ஜி.பரிதா, செயலராக மனோஜ்குமாா், பொருளாளராக பிச்சைமுத்து, குடியாத்தம் திருவள்ளுவா் சங்கத் தலைவராக எம்.சுரேஷ்பாபு, செயலராக பயாஸ் அகமது, பொருளாளராக சுகுமாரன் மற்றும் இயக்குநா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.
முன்னாள் மாவட்ட ஆளுநா்கள் மருத்துவா் வி.எம்.சங்கரன், சி.புவனேஸ்வரி ஆகியோா் புதிய நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா். மாவட்டத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், சேவை திட்டத்தின்கீழ் முதலிடம் பிடித்த மாணவா்கள், அவா்களை பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள், அன்னதான அறக்கட்டளைகளுக்கு அரிசி மூட்டைகள், பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் எப்டிஐ பயிற்றுநா் பகவத் கீதா புத்தாக்கப் பயிற்சி அளித்தாா். நிா்வாகிகள் என்.தேவராஜ், சுந்தரம், ஜெயவேல், ஏ.காசிவிஸ்வநாதன், என்.வெங்கடேஸ்வரன், டி.கமலஹாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.