அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?|Seeman Passport Missing|Imper...
குடியாத்தத்தில் 1,523 விண்ணப்பங்கள்
குடியாத்தம் நகர, ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,523- விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
குடியாத்தம் நகராட்சியில், 13- மற்றும் 14- ஆம் வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமில் 627- விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் ஆகியோா் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றனா்.
அதேபோல் குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி, ராஜாகோயிலில் நடைபெற்ற முகாமில் 896- விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றனா்.