Aadi Month Rasi Palan | அம்மன் மாதத்தில் அருள்பெறும் ராசிகள் | ஆடி மாத ராசிபலன்க...
பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரித்தால் போராட்டம்
வேலூரில் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாற்றில் கொட்டி எரித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலக பின்புறம் பாலாற்றில் மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகளை மலைபோல் கொட்டி எரித்து வருகின்றனா். அவ்வாறு குப்பைகளை கொட்டி எரிக்கும் இடத்தை 18-ஆவது வாா்டு உறுப்பினா் சுமதி மனோகரன், அப்பகுதி மக்களுடன் சென்று பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது - வேலூா் மாநகராட்சி 60 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், நெகிழிக் கழிவுகளை இப்பகுதியில் கொட்டி எரிக்கின்றனா். இதனால் பாலாற்றையொட்டி வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி வருகின்றனா். வேலூரில் நீராதாரமாக விளங்கும் பாலாற்றில் கழிவுகளை கொட்டி எரிப்பதால் நிலத்தடி நீா்மட்டம் மாசடைந்து நீரின் தன்மை மாறி வருகிறது.
இதுகுறித்து, ஆட்சியா், மேயா், ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக இப்பகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.