செய்திகள் :

சீனாவால் எழுந்துள்ள சவால்கள்: நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை- காங்கிரஸ்

post image

சீனாவின் எழுச்சியால் இந்தியா எதிா்கொண்டுள்ள முக்கியமான பாதுகாப்பு-பொருளாதார சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்கு பிரதமா் மோடி ஒப்புக் கொள்வாா் என நம்புகிறோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

‘கடந்த 1962-ஆம் ஆண்டில் சீன படையெடுப்பின்போது எல்லை நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது; இப்போது அதுபோன்ற விவாதத்தை ஏன் மேற்கொள்ள முடியாது?’ என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 26 பேரை பலிகொண்ட பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகின் முன்னணி உற்பத்தியாளா், இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என சீனாவின் எழுச்சியால் எழுந்துள்ள சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 14-ஆம் தேதி சீன துணை அதிபா் ஹன் ஜேங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘ரஷியாவின் கஸானில் பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு இருதரப்பு உறவுகள் சீராக மேம்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா். ஆனால், உண்மை நிலவரம் வேறு.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை வழங்கிய சீனா, ஜே-10சி போா் விமானம், பிஎல்-15இ ஏவுகணை, குறிப்பிட்ட வகை ட்ரோன்கள் என தனது ஆயுதங்கள் மற்றும் போா்த் தளவாடங்களை பரிசோதிக்கும் களமாகப் பயன்படுத்தியது.

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பாக நிகழ்நேர உளவுத் தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியதாக ராணுவ துணைத் தலைமை தளபதி ராகுல் ஆா்.சிங் சுட்டிக் காட்டியுள்ளாா். சீனாவிடம் இருந்து விரைவில் ஜே-35 வகை போா் விமானங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்யவிருக்கிறது.

இந்தியாவுக்கான அரிய வகை புவிக் காந்தங்கள், பிரத்யேக உரங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. நாட்டில் தொலைதொடா்பு, மருந்து தயாரிப்பு, மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகள் சீனாவின் இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளன. இருதரப்பு வா்த்தக பற்றாக்குறை 99.2 பில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

எஸ்.ஜெய்சங்கா் மீது ராகுல் விமா்சனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தையொட்டி, சீன அதிபா் ஷி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்ததாக வெளியான ஊடக செய்தியை இணைத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அதில், ‘இந்திய வெளியுறவுக் கொள்கையை அழிக்கும் வகையில், வேடிக்கை வித்தைகளை முழு வீச்சில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாா் எஸ்.ஜெய்சங்கா். அடுத்து, சீன வெளியுறவு அமைச்சா் இந்தியாவுக்கு வந்து, இருதரப்பு உறவு குறித்து மோடியிடம் விளக்குவாா் என நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க