செய்திகள் :

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

post image

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் கடந்த 10-ம் தேதி முதல் காலை, மாலை என இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் தனது மனைவியுடன் வந்து கையெழுத்திட்டு விட்டு அருகே உள்ள உணவகத்தில் உணவு அருந்த சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

மதன்குமார்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சேலம் மாநகர காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாநகரின் மையப் பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பாய் பிரண்டாக பழகி, மாணவியிடம் 60 சவரன் நகையை மோசடி செய்த தோழி..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் ஒரு ஸ்கூலில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு தயாராகி வருகிறார். அவரது தந்தை குளச்சல் பகுதியில் ஜெரா... மேலும் பார்க்க